ஜினபிம்ப வர்ணனை
1. சுந்தர வதனசு நிருமல பிம்பம்
கோடி சந்த்ரா தித்ய சோதியின் பிம்பம்
அந்தரர் சூழ்ந்து வணங்கிடு பிம்பம்
அறிவரு ஜினவர ஜெய ஜின பிம்பம் (சுந்தர்)
2. சித்த முவந்திட செய்திடு பிம்பம்
சின்மய ரூபம் இலங்கிடும் பிம்பம்
புத்தியும் யுக்தியும் புகுந்திடும் பிம்பம்
புனிதரும் போற்றிடும் ஜெய ஜின பிம்பம் (சுந்தர்)
3. அஷ்ட வினைகளை அழித்திடும் பிம்பம்
அஷ்ட குணங்களும் நிறைந்திடு பிம்பம்
அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஆக்கிடு பிம்பம்
அளவில் சுலட்சண ஜெய ஜின பிம்பம் (சுந்தர்)
4. கருணை வழிந்திடும் எழில்முக பிம்பம்
காண்பவர் நெஞ்சம் கவர்ந்திடும் பிம்பம்
வரகுண சீலர்தம் வாள்முக பிம்பம்
வந்தெமை காத்தருள் ஜெய ஜின பிம்பம் (சுந்தர்)
5. சஞ்சித பாபங்கள் அவித்திடு பிம்பம்
காண்பவர் நெஞ்சம் கவர்ந்திடும் பிம்பம்
வஞ்சகம் பேதம் விலக்கிடு பிம்பம்
வானிடு வில்லெனும் ஜெய ஜின பிம்பம் (சுந்தர்)
6. சீலங்கள் ஐந்தையும் சேர்த்திடு பிம்பம்
சீறும் துவர்ப்பசை செற்றவர் பிம்பம்
மாலுறும் மிச்சை அகற்றிடும் பிம்பம்
மதியிருள் ஓட்டிடும் திகம்பர பிம்பம் (சுந்தர்)
ஜஜதருள்தருள்