த்ருஷ்டாஷ்டக ஸ்தோத்திரம்
ஜிநாலயத்திற்குள் சென்றவுடனே (துதிக்க வேண்டிய துதி
1.த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் பவதாப ஹாரி
பவ்யாத்மநாம் விபவ ஸம்பவ ப்பூரி ஹேது :
துக்தாப்தி ஃபேந தவ லோஜ்வலகூட கோடி
நத்த த்வஜ ப்ரகர ராஜி விராஜ மாதம்.
பிறவிச் சூழலில் ஏற்படும் தாபத்தைப் போக்க வல்லதும்,
பவ்ய உயிர்களுக்கு வைபவங்களை (செல்வங்களை) அளிக்க
வல்லதும், பால் போன்று வெண்மை நிறமானதும், கொடிகளால்
அலங்கரிக்கப்பட்டதும் ஆகிய ஜினாலயம் என்னால் இன்று காணப்பட்டது.
2. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் ப்புவநைக லக்ஷ்மீ
த்தாமர்த்தி வர்த்திக மஹாமுநி ஸேவ்ய மாநம்
வித்யா தரா மர வதூஜந முக்த திவ்ய
புஷ்பாஞ்சலி ப்ரகர ஸோபித பூமிபாகம்.
உலகத்தில் உள்ளஅனைத்து செல்வங்களுக்கு
இருப்பிடமானதும் ருத்தி பெற்ற முனிவர்களால் வணங்கப்படுவதும்
வித்யாதரப் பெண்டிர்களாலும் தேவலோகத்து தேவ தேவியர்களாலும்
பூஜிக்கப்பட்ட மலர்களால் நிரம்பிய நிலத்தையுடையதும் ஆகிய
ஜினாலயம் என்னால் இன்று பார்க்கப்பட்டது.
3. த்ருஷ்டம் ஜிநேந்திரபவநம் ப்பவநாதி வாஸ
விக்யாத நாக கணிகா கண கீயமாநம்
நாநாமணி ப்ரசய ப்பாஸுர ரஸ்மி ஜாலம்
வ்யாலீட நிர்மல விஸால கவாக்ஷ ஜாலம்
பவந வியந்தர தேவ தேவியர்களால் பாடப்பட்ட
இனிய கீதங்களின் ஒலிநிரம்பியதும் வெவ்வேறு
மணிக்கிரணங்களால் பொலிவு பொருந்தியதும் பரந்த
ஜன்னல்களை உடையதும் ஆகிய ஜினாயம் இன்று என்னால்
தரிசிக்கப்பட்டது.
4. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் ஸுர சித்த யக்ஷ
கந்தர்வ கிந்நர கரார் பித வேணு வீணா
ஸங்கீத மிஸ்ரித நமஸ்ருத தீர நாதை
ராபூரி தாம்பர தலோரு திகந்தராலம்.
கந்தர்வர் கிந்நரர் ஆகிய தேவகுலத்து தேவியர் தம்
கைகளில் ஏந்திய குழல் வீணை ஆகிய இசைக் கருவிகளால்
இசைத்துக் கொண்டு வணங்குகின்ற காட்சியையுடையதும்
அவ்விசை ஒலி ஆகாயத்திலும் எல்லா திசைகளிலும் பரவி
தரிசிக்க வரும் பக்தர்களை கவருகின்றதும் ஆகிய ஜினாலயம்
இன்று என்னால் தரிசிக்கப்பட்டது.
5. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் விலஸத் விலோல
மாலா குலாலி லலிதாலக விப்ர மாணம்
மாதுர்ய வாத்ய லய ந்ருத்ய விலாஸி நீநாம்
லிலா சலத்வலய நூபுர நாதரம்யம்.
அலங்கரிக்கப்பட்ட அழகிய மலர் மாலைகள் நிரம்பியதும்
இனிய இசைக்கருகளை கைகளில் ஏந்தி இசைத்துக் கொண்டு
நடனமாடும் பெண்டிர் தம் கால்களில் கட்டியசிலம்பு ஒலி
நிரம்பியதும் அழகு வாய்ந்ததும் ஆகிய ஜினாலயம் என்னால்
இன்று தரிசிக்கப்பட்டது.
6. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் மணிரத்ந ஹேம
ஸாரோஜ்வலை; கலஸ சாமர தர்பணாத்யை:
ஸந்மங்கலை; ஸததமஷ்ட ஸத ப்ரபேதை ;
விப்ராஜிதம் விமல மௌக்திக தாமஸோபம்
மணிகளாலும் இரத்தினங்களாலும் தங்கத்தாலும்
செய்யப்பட்ட கலசம் சாமரை கண்ணாடி முதலிய பொலிவுள்ள
அஷ்ட மங்கலப் பொருட்கள் நிரந்தரமாக வைக்கப்பட்ட ஜினாலயம்
இன்று என்னால் தரிசிக்கப்பட்டது.
7. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் வர தேவதாரு
கற்பூர சந்தந தருஷ்க ஸுகந்தி தூபை ;
மேகாய மாந ககநம் பவநாபி காத
சஞ்சத்சலத் விமல கேதந துங்க ஸாலம்.
சிறந்த தேவதாரு மற்றும் சந்தன மரத்தூள்களாலும் கற்பூரம்
ஆகியவைகளாலும் எரிக்கப்பட்ட நெருப்பிலிருந்து வரும்
நறுமண புகையானது காற்றினால் ஜினாலயத்தில் எல்லா
இடங்களிலும் பரவியுள்ளது. மேலும் அசைகின்ற தூய
கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட உயரமான மதில் சுவர்களையுடைய
ஜினாலயம் இன்று என்னால் தரிசிக்கப்பட்டது.
8. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் தவலாத பத்ரம்
ச்சாயா நிமக்ந தநு யக்ஷ குமார வ்ருந்தை ;
தோ தூய மாந ஸித சாமர பங்க்திபாஸம்
ப்பாமண்டல த்யுதியுத ப்ரதிபாபி ராமம்
வெண்மையும் பொலிவும் பொருந்திய வரிசையாக அமைந்த
வெண் சாமரைகள் யக்ஷ குமாரர்களால் வீசப்படுகின்றன. மேலும்
ஒளிமயமான அழகுவாய்ந்த பாமண்டலம் சோபிக்கின்றது. அத்தகு
அற்புதமான ஜினாலயம் இன்று என்னால் தரிசிக்கப்பட்டது.
9. த்ருஷ்டம் ஜிநேந்திர பவநம் விவித ப்ரகார
புஷ்போப ஹார ரமணிய ஸுரத்ந பூமி
நித்யம் வஸந்த திலக ஸ்ரியமாத தாநம்
ஸந்மங்கலம் ஸகல சந்திர முநீந்திர வந்தியம்.
வெவ்வேறு விதமான நறுமணமுள்ள மலர் மாலைகளால்
அலங்கரிக்கப்பட்டதும் விண்ணுலகிற்கு ஒப்பான
நிலப்பரப்பையுடையதும் வசந்த திலகம் என்னும் லக்ஷ்மியுடன் கூடிய,
மங்கலகரமானதும் அனைத்து முனிபுங்கவர்களால் வணங்கப்பட்டதும்
ஆகிய ஜினாலயம் இன்று என்னால் தரிசிக்கப்பட்டது.
10. த்ருஷ்டம் மயாத்ய மணி காஞ்சந சித்ர துங்க
ஸிம்ஹாஸநாதி ஜிந.பிம்ப விபூதி யுக்தம்
சைத்யாலயம் யததுலம் பரி கீர்த்திதம் மே
ஸந்மங்கலம் ஸகல சந்திர முநீந்தர வந்தியம்.
அநேக செல்வங்களாலும் ஒப்பற்ற மங்கலப் பொருட்களாலும்
அலங்கரிக்கப்பட்டதும் தங்கத்தாலும்
பொருத்தப்பட்டதும் ஆகிய உயரமான சிம்மாசனத்தில்
எழுந்தருளியுள்ள ஜின பிம்பம் உடைய ஜிநாலயம் இன்று என்னால்
தரிசிக்கப்பட்டது.