அத்யாஷ்டக ஸ்தோத்திரம்
1. அத்யமே ஸஃபலம் ஜன்ம நேத்ரேச ஸஃபலே மம
த்வாமத்ராக்ஷம் யதோ தேவஹேது மக்ஷய ஸம்பதா,
சுவாமியே! அழியா செல்வத்திற்கு காரணமாக உள்ள
உன்னை இன்று தரிசித்ததால் என் கண்களும், என் பிறவியும்
நற்பயனைப் பெற்றதுபோல் ஆயின.
2. அத்ய ஸம்ஸார கம்பீர பாரவார; ஸுதுஸ்தர;
ஸுதரோயம் க்ஷணே நைவ ஜிநேந்திர தவ தர்ஸநாத்.
பிரபுவே! உன்னைக் கண்டதால் கடப்பதற்கு அறிதாகிய
மாபெரும் பிறவிக் கடலை நான் கடந்து விட்டதாக
கருதுகிறேன். பிறவிக் கடலிலிருந்து கடப்பதற்கு உன்னை
தரிசிப்பது அவசியமாகும் என்று உணருகிறேன்.
3. அத்யமே க்ஷாலிதம் காத்ரம் நேத்ரேச விமலீக்ருதே
ஸ்நாதோஹம் தர்ம தீர்த்தேஷ் ஜிநேந்திர தவ தர்ஸநாத்.
ஜினபகவானே! இன்று உன்னை தரிசித்ததால் என்
உடலும் கண்களும் தூய்மை பெற்றன தர்மமென்னும்
நீர்நிலையில் ஸ்நானம் செய்ததுபோல் ஆனேன்.
4. அத்யமே ஸஃபலம் ஜன்ம ப்ரஸஸ்தம் ஸர்வ மங்கலம்
ஸம்ஸாரார்ணவ தீர்ணோஹம் ஜிநேந்திர தவ தர்ஸநாத்
அருகதேவா! இன்று நான் உன்னை தரிசித்ததால்
என்னுடைய பிறவியானது மங்களகரமாய் விட்டது. நற்பேறு
பெற்ற நான் சம்ஸாராமென்னும் கடலைக் கடப்பவனாக
ஆய்விட்டேன்.
5. அத்ய கர்மாஷ்டகம் ஜ்வாலம் விதூதம் ஸகஷாயகம்
.துர்கதிர்விநி வ்ருத்தோஹம் ஜிநேந்திர தவ தர்ஸநாத்
ஜினபகவானே!இன்று உன்னை கண்டதால் என்
ஆன்மாவில் படிந்துள்ள எண்வகை வினைகள்
கழிந்தனவாகவும். தீயப் பிறவிக்கு நான் செல்ல மாட்டேன்
என்றும் எனக்கு விளங்குகிறது.
6. அத்ய ஸௌம்யா க்ருஹா ஸர்வே ஸுபா ஸ்சைகாதஸ ஸ்திதா;
நஷ்டாநி விக்ந ஜாலாநி ஜிநேந்திர தவ தர்ஸநாத்.
ஜினபகவானே! உன்னை தரிசித்ததால் எனக்கு
பதினோரு இல்லற நெறியில் ஏற்படும் இன்னல்களை
விளைவிக்கும் எல்லா கிரகங்களும் இடையூறுகளும் ஒழிந்தன.
7. அத்ய நஷ்டோ மஹாபந்த : கர்மணாம் துக்க தாயக;
ஸுக ஸங்கம் ஸமாபந்நோ ஜிநேந்திர தவ தர்ஸநாத்.
ஜினதேவா! நான் இன்று உன்னை தரிசித்ததால் என்
ஆன்மாவில் பந்தித்துள்ள துன்பம் தரக்கூடிய வினைகள்
கழிந்தன. நான் சுகத்தைப் பெற்றவனாகிவிட்டேன்.
8. அத்ய கர்மாஷ்டகம் நஷ்டம் துக்கோத் பாதந காரகம்
சுகாம்போதி நிமக்நோஹம் ஜிநேந்திர தவ தர்ஸநாத்.
பகவானே! இன்று நான் உன்னை தரிசித்ததால்
துக்கத்திற்கு காரணமான எண்வகை வினைகள் கழிந்தன என்று
கருதுகிறேன். சுகமென்னும் கடலில் மூழ்கியவனாய் விட்டேன்.
அதாவது வினைகள் விலகியதால் முக்தி சுகத்தைப் பெற்றேன்
என்று கருதுகிறேன். அதற்கு நீயே காரணம்.
9. அத்ய மித்யாந்த காரஸ்ய ஹந்தா ஞாந திவாகர :
உதிதோ மச்சரீ ரேஸ்மின் ஜிநேந்தர தவ தர்ஸநாத்.
இன்று என்னிடமிருந்த மித்யாத்வம் என்னும்
இருள் விலகியது. ஞானமென்னும் சூரியன் உதயமாயிற்று
என் உடல் நற்பயனைப் பெற்றது. இவைகளுக்கெல்லாம்
காரணம் உன்னுடைய தரிசனமே ஆகும்.
10. அத்யா ஹம் ஸுக்ருதீ பூதோ நிர்தூதோ ஷேஷ கல்மஷ;
புவந த்ரய பூஜ்யோஹம் ஜிநேந்தர தவ தர்ஸநாத்.
ஜினபகவானே! இன்று நான் உன்னை தரிசித்ததால்
என் ஆன்மாவில் படிந்துள்ள எல்லா வினைகளும் கழிந்தன
போல் கருதுகிறேன். நற்பேறு பெற்றவனானேன்.
மூவுலகத்தாராலும் பாராட்டுதலுக்கு உரியவனானேன்.
11. அத்யா ஷ்டகம் படேத்யஸ்து குணாநந்தித மாநஸ;
தஸ்ய ஸர்வார்த்த ஸம்ஸித்தி ஜிநேந்திர தவ தர்ஸநாத்
ஜினபகவானே! உன்னை தரிசித்த எந்த
பவ்யர்களும், நற்குணம் படைத்த மனிதர்களும், இந்த
அத்யாஷ்டகம் என்னும் தோத்திரத்தை படிப்பார்களோ,
அவர்கள் எல்லா செல்வங்களையும் பெறுபவர்
அவர்களுக்கு எல்லா சித்திகளும் கிடைக்கும்.